பல கோடி மதிப்புடைய மாணிக்கக்கற்களுடன் கைதாகிய தேரர்..!!

37 கோடி ரூபா மதிப்புகொண்ட‌ மாணிக்கக்கற்கள் கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றபட்டுள்ளன.குறித்த சுற்றிவளைப்பு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இடம் பெற்றுள்ளது.இரண்டு நீல மாணிக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவை சட்டவிரோதமாக விற்கப்பட இருந்ததாக தெரியவருகிறது.

அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.