வீட்டில் வீசிய துர்நாற்றம்..!!பார்வையிட சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

மிரிஹான பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மிரிஹான ஜூபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து வயோதிப தம்பதியரின் சடலங்கள் வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளன.குறித்த வீட்டில் இருந்து 80 வயதுடைய ஆண் மற்றும் 96 வயதுடைய பெண் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஆணின் சடலம் வீட்டின் அறையிலுள்ள படுக்கையில் இருந்து மீட்கப்பட்டதாகவும், பெண்ணின் சடலம் வீட்டின் சமையலறையில் நிர்வாணமாக காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சில நாட்களாக குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசியொருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், இவ்வாறு வயதான இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.