சுவிஸ் நாட்டில் ரயிலுடன் மக்களை கடத்திய மர்ம நபர்..!

சுவிட்சர்லாந்தில் உள்ள யவெர்டனில் ஸ்டேஷனில் நேற்றிரவு 14 பயணிகள் மற்றும் கண்டக்டருடன் நின்று கொண்டிருந்த ரயிலை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பயணிகளுடன் நின்று கொண்டிருந்த‌ ரயிலை கடத்திய மர்ம நபரை சுவிஸ் பொலிஸார் சுட்டுக் கொன்று பணயக்கைதிகளையும் காப்பாற்றியுள்ளனர்.சுவிஸில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்றிரவு நின்று கொண்டிருந்த ரெயிலை மர்ம நபர் கடத்தியுள்ளார்.

குறித்த மர்ம நபர் பயணிகள் மற்றும் நடத்துனரை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி ரயிலில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் நடத்துனர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ரயிலில் அதிரடியாக நுழைந்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கோடரியுடன் போலீஸாரை நோக்கி விரைந்ததால், கடத்தல்காரனை வேறு வழியின்றி பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.இதையடுத்து பணயக்கைதிகளாக இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.