தாயை அறையில் கட்டிவைத்து..13வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர்..!

நேற்று (9.02.2024) தாயின் கை கால்களை கட்டிவிட்டு 13வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் ள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.34 வயதுடைய குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவரே குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ளார்.அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயுடன் தகாத உறவை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று சந்தேக நபர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து சிறுமியின் தாயின் கை கால்களை கட்டி சமையலறையில் தடுத்து வைத்து விட்டு சிறுமியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.