தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம்..!!

இன்று(2024.02.10) காலை யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலத்தை பார்த்து அச்சம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.