குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி சடலமாக மீட்பு..!!

வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இரத்தினபுரி – பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குடும்பத்தினர் நேற்று செய்த முறைப்பாட்டையடுத்து பலாங்கொடை பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் சிரேஷ்ட வகுப்பில் கல்வி பயின்ற மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.