நாயை எரித்து கொலை செய்த நபர் கைது..!!

நேற்று (11.2.2024) யக்கல பொலிஸாரால் கம்பஹா – இம்புல்கொட பிரதேசத்தில் நாயை எரித்து கொலை குற்றத்திற்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதுடைய ஜகத் குமார என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உலயகொட பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த உயர் இன நாய்களுடன் உயிரிழந்த நாய் இணைந்து செயற்பட்டதால் அவர் நாயை தீ வைத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.