18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி..!!

18 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மாணவர்கள் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களாவர்.இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வெல்லவாய – மல்வத்தாவல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 5 ஆம் வகுப்பு மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர்.

அப்பாடசாலையில் பயிலும் 18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர்.இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.