காதலர் தினத்திற்காக பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது,அதாவது காதலர் தினத்தில் சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சிறுவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு என அறிவித்துள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

காதலர் தினம் போன்ற சிறப்பு தினங்களைக் கொண்டாடும் போது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டு, பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து வகையான வன்முறைகள் குறித்தும் கிட்டத்தட்ட 3,000 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்நாளில் சிறுவர்கள் அதிகளவில் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வதாகவும், தேவையற்ற இடங்களில் சுற்றித் திரிவதால் பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.