22 வயது இளைஞர் மீது வர்த்தக நிலைய உரிமையாளர் கத்தி குத்து..!!

இளைஞர் ஒருவர் மீது பல இடங்களில் கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவமானது வவுனியா – கோவில்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. வவுனியா, சுந்தராபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார்.இரவு குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (13/02/2024) காலை மேற்படி வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் அங்கிருந்த பணியாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கத்தியால் தன்னை பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்தார்.காயமடைந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.