நண்பன் ரூபத்தில் வந்த எமன்..!இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

நண்பனால் இளைஞன் ஒருவரின் உயிர் போய் உள்ள சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நண்பனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்ததாலேயே நடந்துள்ளது.குறித்த சம்பவம் நேற்று(18.02.2024) யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி அதிலிருந்துகடந்த ஆறு மாதங்களுக்கு முன் மீண்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற போது போதைப்பொருள் இளைஞனுக்கு கொடுத்துள்ளனர்.நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால், அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.அந்த இளைஞனுடன் போதைப்பொருள்பாவித்த மற்றய‌ இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சிறுவன் தனது தாய்க்கு போன் செய்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் நெஞ்சுவலிப்பதாகவும் கூறியுள்ளார்.

தயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றதுடன், மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை இளைஞன் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார், இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த மற்றைய இளைஞனை கைது செய்துள்ளதுடன் மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தினர்.இதையடுத்து, வைத்திய அறிக்கையில் இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.