வடமராட்சி கிழக்கில் கரையோதுங்கும் வித்தியாசமான பொருட்கள்..!!

இன்று வியாழக்கிழமை (22.02.2024) காலை இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.இதனை அவதானித்த கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.குறித்த மிதக்கும் இரும்பு கூடாரத்தை கரைக்கு கொண்டுவர கட்டைக்காடு மீனவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால், கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தினர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் , காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.