மனைவியை சந்தோஷ படுத்துவதற்க்காக கணவன் செய்த மோசமான செயல்..!!

தனது மனைவிக்கு காதலர் தினத்தன்று பரிசு கொடுத்து சந்தோஷபடுத்துவதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் சம்பந்தபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது யாழ்ப்பாணத்தில் நடை பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் கங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரும், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வல்வெட்டித்துறையில் உள்ள முதியவர்கள் வாழும் இல்லத்தில் காதலர் தினத்தன்று 29 பவுண் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாண நகரில் நேற்று 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்றபோது பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதான சந்தேக நபர் 25 பவுண் தாலியுடன் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.