சிறைச்சாலைக்கு கணவனை 7மாத குழந்தையுடன் பாக்கச்சென்ற பெண் கைது..!!

ஹெரோயின் போதைப்பொருளை தனது ஆடையின் ஓரத்தில் மறைத்து வைத்து தனது கணவருக்கு கொடுப்பதற்காக வாதுவ பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலைக்கு சென்ற பெண் கைதாகியுள்ளார்.குறித்த பெண்னின் 7மாத குழந்தையும் கைதாகியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாதுவ வெரகம அல்விஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் 2500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது கணவனுக்கு வழங்குவதற்காக தனது ஆடையின் ஓரத்தில் மறைத்து வைத்திருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.