பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு..!!

அழுகிய நிலையில் இருந்தவாறு சடலம் ஒன்று யாழ்ப்பாணம் – உரும்பிராய்ப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.நேற்று (22.02.2024) குறித்த சடலமானது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.66 வயதுடைய சின்னத்துரை ஜெகதீஸ்வரி என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இவர் இறந்ததிற்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை.இந்நிலையில், மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பிறேமகுமார் மேற்கொண்டு வருகிறார்.