அறையில் 5 1/2 மாத குழந்தையை தவிக்க விட்டு வெளிநாடு சென்ற தம்பதிகள்..!!பொலிஸார் தீவிர விசாரணை..!

இளம் தம்பதிகள் இருவர் பிறந்து 5 1/2 மாதமான குழந்தையை லஹா லுல் கந்துர தோட்டத்திலுள்ள , லைன் அறையில் உள்ள வாடகை அறையில் விட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ள சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.குறித்த தம்பதியினர் மட்டகளப்பில் இருந்து இரண்டு வாரங்களிற்கு முன்னர் தற்காலிக வதிவிடமாக தங்க வந்ததாகவும்,இவர்கள் வரும்போது அங்கு வசித்து வந்த பெண் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தம்பதியினர் லைன் அறையில் வசிக்கும் ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் வெளிநாடு செல்வதால் அறையில் விட்டுச்சென்ற குழந்தையைப் பராமரிக்க யாரையாவது ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , குடும்ப நலப் பணியாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அறையில் குழந்தை அழுது கொண்டிருந்தது.மீட்கப்பட்ட குழந்தை குடும்ப நலப் பணியாளரால் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.தெல்தோட்டை வைத்தியசாலையில் தாய்ப்பால் ஊட்டும் வசதிகள் இல்லாத காரணத்தினால் , குழந்தையை பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும், சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலஹா தெல்தோட்டை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கபில அத்தபத்து தெரிவித்தார்.இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கஹல பொலிஸார், தம்பதியினர் உண்மையில் வெளிநாடு சென்றுள்ளார்களா அல்லது வெளிநாடு செல்வதாகக் கூறி நாட்டில் எங்காவது பதுங்கியிருக்கிறார்களா என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.