முறையற்ற உறவு காரணமாக நடந்த விபரீதம்..!! ஒருவர் கொலை..!

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் நடை பெற்றுள்ளது.குறித்த கொலையானது தவறான உறவு காரணமாகவே நடந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண் ஒருவர் நாதேவல பகுதியில் கிளை வீதியில் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.அது குறித்து நடவடிக்கை எடுத்த பொலிஸார் உயிரிழந்த நபருடன் தவறான உறவில் ஈடுபட்ட வந்த நபரே இந்தக் கொலையை செய்துள்ளதாக மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

45 வயதுடைய நாதேவல, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.கொலையை செய்த சந்தேக நபரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், பின்னர் அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வந்துரம்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.