மகனின் திருமணத்திற்காக தாயும் மகனும் சேர்ந்து செய்த செயல்..!! இருவரும் கைது..!

ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் தாயும் மகனும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்படிஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசித்து வரும் 24 வயதாகிய இளைஞனும் அவருக்கு உதவி புரிந்த தாயாருமே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் குறித்த இளைஞருக்கு திருமணமாகவுள்ள நிலையில் அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்பட்டதால் அதனை பெறுவதற்கு தனது தந்தையிடமிருந்து 5 இலட்சம் ரூபாவை பெற்று கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், வாங்கிய கஞ்சாவை தாய் உதவியுடன் குறைந்த அளவில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.