நீங்க 2 பேரும் இப்புடி சுத்தும் போதே தெரியும் இப்புடி எல்லாம் நடக்கும்னு..!! ராஷ்மிகா மறைமுகமாக போட்ட பதிவு..?

நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் மத்தியில் நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானா இவர் அதன் பிறகு தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.தொடர்ந்து தமிழில் அவ்வப்போது நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அதில் ஒன்று அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தி ரூல்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும்.இவ்வாறு இருக்க மறுபக்கம் ராஷ்மிகா தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக சில விடயங்கள் சிறிது காலமாக பரவிவருகிறது.இதை கண்டும் காணாதது போல் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டா இருக்கின்றனர்.இது குறித்து அவர்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வருவது புகைப்பட ஆதாரங்களுடன் அடிக்கடி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைராலகி வருகின்றன.

மேலும் அவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றும் கிசுகிசு சமீபத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் “ராஷ்மிகா மந்தனா இந்தியாவின் நேஷனல் க்ரஷ் அதனால் அவருக்கு விஜய் தேவரகொண்டா போல ஒரு கணவர் வேண்டும்..” என டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.இதை பார்த்த ராஷ்மிகா மந்தனா “That’s very tருஎ” என பதில் அளித்துள்ளார்.அதனால் அவர் விஜய் தேவரகொண்டா உடன் காதலை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் என ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பரவலாக தற்போது பேசப்பட்டு வருகிறது.