சகோதரர்களை மருத்துவ சிகிச்சை அளிக்கும் போர்வையில் தகாத முறைக்கு உட்படுத்திய பிக்கு..!!

ஹோமாகம பொலிஸாரால் பிக்கு ஒருவர் இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.மாந்திரீகத்திலும் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர், மருத்துவ சிகிச்சை என்ற போர்வையில் 13 வயது சகோதரர்களை தகாத முறைக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

சடங்கு ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக குறித்த சிறுவர்களை, தன்னுடன் சில காலம் இருக்குமாறு அவர்களின் பெற்றோருக்கு அந்த பிக்கு அறிவுறுத்தியுள்ள நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.