பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!!தீவிர விசாரணையில் பொலிஸார்..!

கைவிடப்பட்ட பாழடைந்த வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவமானது கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.கடந்த 25ஆம் திகதி வல்பொல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் இவர் கணவரின் தாய், தந்தை மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (29) காலை கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடியல தெமங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பெண்ணின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.