யானை தந்தத்தை கோடரியால் வெட்டி மறைப்பு..!!சந்தேக நபர் கைது..!

நேற்று வெள்ளிக்கிழமை (01/03/2024) 4 அடி நீள தந்தத்தைக் கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவர் அம்பலாந்தோட்டை பகுதியில் கைதாகியுள்ளார். 29 வயதுடைய அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவரே குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டியாகல வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.