கடலில் மிதந்து கொண்டிருந்த சடலம்..!! யார்..? பொலிஸார் விசாரணையில்..!

நேற்று (01/03/2024) இனங்காணப்படாத‌ ஆணொருவரின் சடலமொன்று திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திருகோணமலை கடலில் சடலம் மிதந்ததையடுத்து, பொலிஸ் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.இடது காலை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது அடையாளம் இதுவரை அறியப்படாத போதிலும்,

மரணத்திற்கான காரணமும் இன்னும் அறியப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும் சடலத்தை இனம் காண்பதறகான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.