நான் பேருந்தில் செல்லும் போது அவர் எனது டி-ஷர்ட்டுக்குள் கைவிட்டார்..!! நடிகை ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் ஆவார், இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா,ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை 1, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று கொடுத்தது.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் ஆண்ட்ரியா. சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊம் சொல்றியா மாமா சொல்றியா மாமா என்ற பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந் நிலையில் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகாவும் தைரியமாகவும் பேசும் ஆண்ட்ரியா ஒரு நேர்காணலில் அவர் தனது 11 வயதில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தைப் பற்றி பேசியுள்ளார். “நானும் என் தந்தையும் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு 11 வயதுதான். நான் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்திருந்தேன். அப்போது திடீரென்று யாரோ என் டி-ஷர்ட்டுக்குள் கை வைத்ததை உணர்ந்தேன்”“உடனே கொஞ்சம் முன்னேறி உட்கார்ந்தேன். இந்த சம்பவத்தை நான் எனது அம்மாவிடமோ, தந்தையிடமோ சொன்னதில்லை. ஏன் என்று தெரியவில்லை.’’ இதை ஏன் என் பெற்றோரிடம் கூறவில்லை என்றும் எனக்கு தெரியவில்லை.”

இதைப் பற்றி நான் எனது தந்தையிடம் சொன்னால் என் தந்தை அதற்காக நடவடிக்கையை எடுத்திருப்பார். அதானல் தான் நான் செய்யவில்லை. ஏனென்றால் நாம் அந்த வகையில் நமது சமூகத்தால் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதை பற்றி நீங்கள் பெரிதாக பேச வேண்டாம் என்று சமூகம் விரும்புகிறது” என கூறியிருந்தார்.