வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்..!!பர பரப்பை ஏற்படுத்திய மரணம்..!

மருத்துவர் ஒருவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தெரிவித்துள்ளனர்.குறித்த மருத்துவர் கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது.37 வயதுடைய சம்பவத்தில் காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் என்றும், சம்பவம் இடம்பெற்ற போது மனைவி வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய சட்ட வைத்திய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் காலி பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இளம் வைத்திய சடலமாக மீடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.