தமிழகத்தை அதிர்வலையில் ஆழ்த்திய 9 வயது சிறுமியின் கொடூர‌ கொலை சம்பவம்..!!

இந்தியா புதுச்சேரி பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணமல் போன சிறுமி சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுவை மாநிலத்தையே உலுக்கி இருக்கிறது. புதுச்சேரி சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் டாடா ஏஸ் வண்டி டிரைவரரக வேலை செய்யும் இவரது 9 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந் நிலையில் கடந்த 2ம் திகதி மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த‌ போது திடீரென காணாமல் போய் உள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.கடந்த 4 நாட்களாக தேடியும் சிறுமி கிடைக்கவில்லை இந் நிலையில் நேற்றய தினம் மாயமான அந்த ஒன்பது வயது சிறுமி வீட்டின் அருகே ஓடும் சாக்கடை வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் புதுச்சேரி மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்வலையில் ஆழ்த்தி இருக்கின்றது.இதனை அடுத்து சந்தேகத்தின் பெயரில் மூவரை கைது செய்து விசாரணை நடைபெற்ற நிலையில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.நாட்டை உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் விவேகானந்தன் 54 வயது மற்றும் கருணாஸ் 19 வயது உடையவர்கள் என்பது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு நபர்களும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து உடற்கூறு ஆய்வு தற்போது நடந்து வருவதை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது இந்த கொலைக்கு வேறு ஏதேனும் முகாந்திரம் உள்ளதா? என பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.