மயங்கி விழுந்ததால் இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இருவர் உயிரிழப்பு..!!

இன்று புதன்கிழமை இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் மயங்கி விழுந்ததால் இருவர் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.இதனடிப்படையில் கலவான பொலிஸார், கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 13 வயதுடைய கலவான பிரதேசத்தை சேர்ந்த இமல்கா சட்சராணி என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியாவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கடைக்குச் சென்று திரும்பும் போது திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார் என மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.60 வயதுடைய எதிரிசூரிய ஆராச்சி – பன்னிபிட்டிய ஆரவல பகுதியைச் சேர்ந்த டெரன்ஸ் ஆனந்த எரிசூரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.விரிவுரையாளர் தனிப்பட்ட தேவைகளுக்காக மஹரகமவுக்கு அருகில் உள்ள சந்தைக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.