பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் கண்டறிய வவுனியா பொலிஸார் மக்களிடம் கோரிக்கை..!!

வவுனியா பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (05) வவுனியாவில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.நவம்பர் மாதம் 07 ஆம் திகதி புள்ளி நிறச் சட்டையுடன் வயோதிபப் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வயோதிபப் பெண்உயிரிழந்துள்ளார்.

சுமார் 5 அடி உயரமுடைய குறித்த வயோதிபப் பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த பெண்ணின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுளது.குறித்த பெண் தொடர்பாக தகவல் தெரிந்தோர் அல்லது உறவினர்கள் வவுனியா வைத்தியசாலையை அல்லது வவுனியா பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.