20 வயதுடைய மகனால் தாய்க்கு நேர்ந்த கொடுமை..!!

6/3/2024 ளுத்துறை வடக்கு பொலிஸாரால் 59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.20 வயதுடைய களுத்துறையை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைதாகியுள்ளார்.பொலிஸார் கடந்த 4 ஆம் திகதி தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.விசாரணையின் போது, ​​சந்தேக நபர் பொலிஸாரிடம் தான் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், சம்பவத்தின் போது போதையில் இருந்ததாகவும், எதுவும் அவருக்கு நினைவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதே வேளை மகன் தன்னை வல்லுறவுக்குள்ளானததை தாயார் முதலில் மறுத்தார் எனவும் தெரியவருகின்றது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.