கடல் அலையில் சிக்கிய வெளிநாட்டு பெண்..!! பொலிஸாரின் வீரச்செயல்..!

வெளிநாட்டு பெண் ஒருவர் மாத்தறை – கொடவில, மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற போது கடல் அலையில் சிக்குண்டு கடலில் மூழ்கியுள்ளார்.அப்போது பணியில் இருந்த சுற்றுலாப் பிரிவுக்குட்பட்ட உயிர்காப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளினால் அந்தப் பெண் பத்திரமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின் போது, குறித்த வெளிநாட்டு பெண்ணை சார்ஜன்ட் மஞ்சுள ( 72167 ), பொலிஸ் கான்ஸ்டபிள் லஹிரு (20373) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ஷான் (19407 ) ஆகியோரே காப்பாற்றியுள்ளனர்.இவ்வாறு மீட்கப்பட்டவர் 47 வயதுடைய இத்தாலிய பிரஜையாவார் என தெரிய வந்துள்ளது.