பேஸ்புக்கில் இடம் பெறும் மோசடி..!!மக்களுக்கு எச்சரிக்கை..!

தற்போது நாடுகள் டிஜிட்டல் மயமாகி கொண்டுவருகிறது.இந்த வகையில் சோஷியல் மீடியாக்களின் பங்கே இதில் அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் பங்கு அதிகரிக்க அவற்றில் பல ஏமாற்றுப் பேர்வழிகளின் செயல்களும் அதிகரித்துக்கொண்டே போகிறது.அண்மைக்காலமாக பேஸ்புக் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொள்ளும் சில ஹேக்கர்களின் ஏமாற்று வித்தை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான ஹக்கர்கள் பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து மேசஞ்சர் ஊடாக குறித்து நபரின் மேசஞ்சருக்கு தொடர்புகொள்கின்றார்.பேஸ்புக்கை ஹக்செய்து அவர்களுக்குப் பரீட்சயமான நண்பர்களின் போலி கணக்குகள் ஊடாக மேசஞ்சரில் தொடர்புகொண்டு அவர்களை ஒரு குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் எனவும் கேட்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து குழுவில் இணைக்க ஒரு OTP வந்திருக்கும் என்று கேட்பார்கள். அதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் திருடிவிடுவார்கள். அவர்கள் “ Hello I’m contesting for an ambassadorship spot at an online Facebook access program can you pls vote for me ” இவ்வாறு தொடர்புகளை ஏற்படுத்துகின்றனர்.நாம் பதில்களை வழங்கும் போது பின்னர் “ You have to send me your number so I can add you to the voting group” இவ்வாறு பதிலனுப்புகின்றனர்.

இதுபோன்ற கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால், உங்கள் வங்கி கணக்கு மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்படும்.பின்னர் ஹக்செய்யப்படும் பேஸ்புக் கணக்குகள் அவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டு ஏனையவர்களை நம்பும் படி இவ்வாறு இணைத்துவிடுவார்கள்.எனவே இணையத்தில் எப்போதும் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள். அத்துடன் உடனடியாக தீர்மானம் எடுத்து உங்களது தனிப்பட்ட தரவுகளை வழங்கி விடாதீர்கள். முதலில் தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள்.