காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு..!! தீவிர விசாரணையில் பொலிஸார்..!

காணாமல் போன கரந்தெனிய, தல்கஹாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டிய – தலாவ பிரதேசத்தில் காணி ஒன்றில் இருந்து குறித்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கரந்தெனிய, நல்கஹாவத்தை, கங்கா வீதியில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்று நேற்று (08) அவரை பலவந்தமாக அழைத்துச் சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.