மாமனாரை கொன்றுவிட்டு தனது உயிரையும் மாய்க்க முயன்ற மருமகன்..!!

கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரை குடும்பதகராறு காரணமாக மருமகன் கொலை செய்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.81 வயதான மயில்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் மருமகனே இவ்வாறு மாமனாரை கொன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனது மாமனாரை கொலை செய்த மருமகன், பின்னர் சில மருந்து மாத்திரையை உட்கொண்டதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.இவ்வாறு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மருமகன், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.