எனது உதட்டில் கை வைத்து தவறாக நடந்துகொண்டார்..!!நடிகை ரெஜினாவின் கசப்பான சம்பவ‌ங்கள்..!

சினிமா துறையில் இப்போதும் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் எதிர்பார்க்கும் கலாச்சாரம் இருந்து வருகிறது.இது தற்போது சினிமா நடிகைகளிற்கு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது.பட வாய்ப்புகள் தேடி வரும் நடிகைகள் மட்டுமின்றி, நடிகைகளின் தாய்மார்களும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்திக்கின்றனர். நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இளம் கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மற்றும் பிற‌ மொழிகளிலும் பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.ரெஜினா கசாண்ட்ரா தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத் குமார் கதாநாயகனாக நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். இதில் வில்லன் குழுவைச் சேர்ந்த ஆரவ்வுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரெஜினா அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் சம்பவம் குறித்து ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் போது “என்னை போன் கால் வாயிலாக தொடர்பு கொண்டு, அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா என்று கேட்டார்கள். நான் சம்பளத்தில் எதோ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டேன்.

ஆனால், அதன்பின் தான் தெரிய வந்தது, அவர்கள் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட் வேறு என்று. அதன்பின் நான் அப்படியொரு அனுபவத்தை சினிமாவில் சந்திக்கவில்லை”.“இது சினிமாவில் மட்டும் நடக்காது. இந்த வகையான அட்ஜஸ்ட்மென்ட் எல்லா இடங்களிலும் நடக்கும். நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட் சென்றாலும், அங்கே ஒரு கதை இருக்கும்.

“நான் கல்லூரியில் படிக்கும் போது, ​​ஒரு முறை யார் என்று தெரியாத மனிதர் ஒருமுறை எனக்கு முன்னால் நடந்து வந்து என் உதடுகளில் கையை வைத்து தடவி தவறாக நடந்துக்கொண்டார், என்று ரெஜினா தனது மோசமான அனுபவங்களைப் பற்றி கூறினார். இது குறித்து பல பேட்டிகளில் பேசப்பட்டாலும் இது தற்போது வைரலாகி வருகிறது.