ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கொடூரம்..!!அநுராதபுரம் பகுதியில் அரங்கேறிய சம்பவம்..!

ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.சந்தேகநபரை நேற்று அனுராதபுரம் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ​​அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.பாடசாலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மேற்படி ஆசிரியர் குறித்த மாணவியை அப்பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், விடுதியின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.குறித்த மாணவியின் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.