பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி..!!

பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் ஆவார்.

ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.இதேவேளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் ஒருவர் ஹம்பேகமுவ பிரதேசத்தில் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபர் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அழைத்து சென்ற போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போது, ​​பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.