வவுனியா பாடசாலை ஒன்றில் வெடிக்காத நிலையில் இருக்கும் மோட்டார் குண்டுகள் மீட்பு..!!

வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் வவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று (11/03/2024) குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதுவவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் குப்பைக் குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​குறித்த குழியில் வெடிக்காத மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் இருந்து ஏழு மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.இதன்போது மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.