கொழும்பு தாமரை கோபுரத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட இருவருக்கு நடந்த சோகம்..!! நடந்து என்ன.?

போதைப் பொருள் உட்கொண்டு இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவமானது கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது நடைபெற்றுள்ளது.உடல் நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்த நிலையில்,குறித்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முல்லேரியா, உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அழகு நிலையம் ஒன்றின் முகாமையாளரான ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்ஷானி என்ற 27 வயதுடைய பெண்ணும், தெஹிவளையில் வசித்து வந்த சமிந்து திரங்க பெர்னாண்டோ என்ற 22 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த போதை மருந்துகளை உட்கொண்டு சுகவீனமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இந்த மருந்துகளை உட்கொண்டு சுகவீனமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, தனது மகளின் மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் தாயார் டொனா ரசிகா நிலாந்தி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.குறித்த விருந்தில் உயிரிழந்த ரசாங்கிகா உட்பட ஏழு பேர் போதைப்பொருளை உட்கொண்டதாக அவரது காதலன் எனக் கூறிக்கொள்ளும் இளைஞன் கூறியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.