பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு கடுமையான எச்சரிக்கை..!!

கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களுக்கு மீண்டும் ஒரு முறை கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்திற்கு மத்தியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மாதம் 26 ஆம் திகதி கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தது.அதிக வெப்பம் நிலவும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்கள் போதியளவு நீர் பருகுவதற்கான அல்லது சோர்வைப் போக்குவதற்கான வழிவகைகளை செய்வது பொருத்தமானது எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.வெப்பம் நிலவும் நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இந்த நிலையில், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுவதாக கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.