மருந்து மாத்திரையால் பறி போன சிறுமியின் உயிர்..!!

நான்கு வயது சிறுமி ஒருவர் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று (11/03/2024) அன்று மஹியங்கனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிறுமியின் பாட்டி கொடுத்த மாத்திரை சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது.

இதனால் மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன் தினம் (11) உயிரிழந்துள்ளார்.தாய் வெளிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இவர்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள வேறொரு வீட்டில் தந்தை வசிப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.