13 ஆண்டுகள் கழித்து கிடைத்த நீதி..!! 10 வருட சிறைத்தண்டனை..!

நுவரெலியா மேல் நீதிமன்றம் நானுஓயாவில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.நானுஓயா பகுதியைச் சேர்ந்த நபரால் 2011ஆம் ஆண்டு மேற்படி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

52 வயதான சந்தேக நபருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு பத்து வருட கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.மேலும், வழக்கு விசாரணைக்காக ரூ.15,000 செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அந்தத் தொகையைச் செலுத்தாவிட்டால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.