கடற்படையினர் கண்முன்னே கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட தம்பதிகள்..!!யாழில் பரபரப்பு சம்பவம்..!

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து இரு தம்பதியினர் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடற்படை வீரர்களின் நடத்தை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது. வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை சோதனைச் சாவடிக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.கடந்த 11ஆம் திகதி வட்டுக்கோட்டை பொன்னாலை சந்தியில் உள்ள கடற்படை சாவடிக்கு அருகில் தம்பதியர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.கடத்தப்பட்ட பிறகு குறித்த இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.இந்த நிலையிலேயே, கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்த சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.