என்னை மிரட்டி அந்த மாதிரி காட்சியில் நடிக்க சொன்னார்கள்..!! நடிகை சமீரா ரெட்டி ஓப்பன் டாக்..!

நடிகர் சூர்யா நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.இந்த படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே ஒரு நல்ல ரீச்சையும் கொடுத்தது.இந்த படத்தை தொடர்ந்து த‌மிழில் நடுநசி நாய்கள், வேட்டை ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.இவ்வாறு பல படங்களில் நடித்து முன்னி நடிகையாக வலம் வரும் போது வர் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டியும் படங்களில் நடிக்கும் போது பல்வேறு பாலியல் தொல்லைகளை சந்தித்துள்ளார்.அதையும் தாண்டி தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். இவரது நடிப்பு திறமை ஓரளவுக்கு பேசப்பட்டு வந்தது.இதனிடையே இவர் பிரபல தொழிலதிபராக இருந்து வந்த அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குழந்தை பிறப்பதற்கு பின் சமீரா ரெட்டி திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து வெளியேறிவிட்டார்.இருந்தாலும் இவரை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.

இதனிடையே அடிக்கடி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் ஒரு பேட்டியில், திரையுலகில் ஒரு நடிகையாக தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.அதாவது, நான் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும்போது, ​​ஒரு காட்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென இயக்குனர் என்னிடம் வந்து அடுத்த காட்சி லிப்லாக் காட்சி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.இது குறித்து எனக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை.

திடிரென்று நீங்கள் லிப்லாக் காட்சி என்று சொன்னதால், என்னால் நடிக்க முடியாது என்றேன்.அதற்கு அவர் இதுக்கு முன்னாடி நீங்க நடித்த மூசபஃர் படத்தில் மட்டும் மட்டும் லிப் லாக் காட்சியில் நடித்தீர்கள். இதுல நடிக்க முடியாதா? முடிந்தால் நடியுங்கள். இல்லை என்றால் இந்த படத்தை விட்டு வெளியேறி போய்விடுங்கள் என மிரட்டினார்கள்.அதனால் அந்தப் படத்தில் அந்தக் காட்சியில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இப்படியாக படுக்கையறை காட்சிகள், மிகவும் கிளாமரான உடையில் தோன்ற வேண்டிய காட்சிகள்,லிப்லாக் போன்ற காட்சிகளில்வர்களுக்கு தேவைப்பட்டால் நாம் நடிக்க வேண்டும் என மிரட்டி அந்த காட்சியை எடுத்து விடுவார்கள்.இவ்வாறு திரையுலகில் நடிகைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் சமீரா ரெட்டி.