வீட்டை சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு..!! கம்பஹாவில் அதிர்ச்சி சம்பவம்..!

வீடு ஒன்றை சோதனையிட சென்ற சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று இரவு (20/03/2024) கம்பஹா – கணேமுல்லை பிரதேசத்தி இடம் பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் போது விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பொலிஸ் அதிரடிப்படையினரின் பதில் தாக்குதலில் குறித்த நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.