இலங்கையில் அதிகரித்து வரும் நோய்..!! தினசரி 3 மரணங்கள் பதிவு..!

சுகாதர திணைக்களம் நாட்டில் நாளொன்றுக்கு மூன்று பேர் வாய் புற்றுநோய் காரணமாக மரணம் அடைகின்றனர் என தெரிவித்துள்ளது.வெற்றிலை மற்றும் புகையிலையை உட்கொள்வதால் பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.மற்றும் வாய் புற்றுநோயால் இதய நோய், நிமோனியா போன்ற நோய்களும் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

மார்ச் மாதம் 20ஆம் திகதி வாய் புற்றுநோய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக தினசரி 6 நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.