சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட தந்தை..!!தாயும் உடந்தை..!

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவமானது வவுனியாவில் உள்ள தோணிக்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலை சென்ற போது தனது ஆசிரியரிடம் நேற்றய தினம் (21-03-2024) காலை தான் விழித்தெழும்போது ஆடையின்றி இருந்ததாக தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்திருந்தது.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரனை செய்ததில் சிறுமியின் தந்தையான 36 வயதுடையவரை கைது செய்துள்ளனர்.சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், இதற்கு முன்னரும் சிறுமி பலியால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் எனவும் அது தொடர்பாக தாயிடம் தெரிவித்தும் தாயார் அதனை கருத்தில் கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சிறுமியின் தாயாரையும் கைது செய்யும் முயற்சியை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான சிறுவர் மற்றும் சிறுமிகள் குற்றத்தடுப்பு பிரிவினர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.