ஏமாந்து போன இளைஞன்..!! ஓடாத பேருந்துக்கு முன்பதிவு..

இணையத்தளம் ஊடாக கொழும்பு செல்வதற்கு பேருந்தை முன்பதிவு செய்து பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவர் கொழும்பில் நடைபெறும் போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்காக பேருந்து முன்பதிவு செய்யும் இணையதளம் ஒன்றிற்கு வங்கி அட்டை ஊடாக‌ இரண்டு இருக்கைகளுக்கு ரூ.4,600 செலுத்தி முற்பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து முற்பதிவு செய்தவருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் ஊடாக பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் செய்தி அனுப்பபட்டுள்ளது. இதனை நம்பி கொழும்பு செல்வதற்காக( 21/03/2024) இரவு குறித்த நபர் தெல்லிப்பழை சந்தியில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.எனினும் நீண்ட நேரமாகியும் பேருந்து வராத நிலையில் இணையத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் பயன‌ளிக்கவில்லை.

இதனையடுத்து தனியார் பேருந்துகள் தரித்து நிற்கும் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்த போதும் முற்பதிவு செய்த பேருந்தை காணவில்லை.அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர், வேறு பேருந்தில் கொழும்பு நோக்கி பயணத்தை தொடர்ந்துள்ளார். பயணத்தின் போது, ​​தான் பதிவு செய்த பெயரில் பேருந்து இயக்கப்படவில்லை என பேருந்து நடத்துனரிடம் விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.அதே சமயம், இணையதளம் மூலம் பல வகையான வங்கி அட்டை மோசடிகள் நடப்பதுடன், இயக்கப்படாத பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதில் மோசடியும் நடக்கிறது. எனவே இவ்வாறான மோசடி செய்பவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.