பண்டிகை காலத்தை முன்னிட்டு பொருட்கள் வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் நடைபெறும் மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வரும் பண்டிகை நாட்களில் பொருட்களை விற்பனை செய்யும் இடங்களில் பொருட்களை வாங்கும்போது, நுகர்வோர் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு ‘sale’என்ற பெயரில் காலாவதியாகவிருக்கும் பொருட்களின் தகவல்கள் மாற்றப்பட்டு, பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அதன் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.ஆகயினால் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.