குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்..!! ஏற்பட்ட பரபரப்பு..!

ஒன்றரை வயது குழந்தை பாத்திரம் ஒன்றைவைத்து விளையாடிய நிலையில் பாத்திரம் குழந்தையின் தலையில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது தமிழகமான சென்னையில் உள்ள போரூரில் இடம்பெற்றுள்ளது.ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை தீயணைப்புப் படையினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,சென்னை போரூரில் வசித்து வரும் கார்த்திக்-ஆனந்தி தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தையான கிருத்திகா, வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது.பெற்றோர் எவ்வளவோ முயன்றும் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை அகற்ற முடியவில்லை.

பின்னர் இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கத்தரிக்கோல் பயன்படுத்தி, குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.குறித்த‌ சம்பவம் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.