மதத்தை மக்களுக்கு போதிக்க வேண்டியவரே இப்படியா..? ஹோட்டல் அறையில் இருந்து பிடிபட்ட பிக்கு..!!

பெண் ஒருவருடன் ஹோட்டல் அறை ஒன்றில் த‌ங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது தியதலாவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.ஹோட்டல் அறையில் 40 வயதான பெண் ஒருவருடன் 46 வயதுடைய‌ பௌத்த பிக்கு தங்கியிருந்த நிலையில் கைதாகியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைதான பிக்கு பொரளந்த பகுதியில் அமைந்துள்ள விஹாரையொன்றைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பிக்குவுடன் தங்கியிருந்த பெண் திருமணமானவர் என்றும், பௌத்த பிக்கு பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.